காணி விற்பனை மூலம் அனுகூலம் பெறுவதற்கான எளிய வழிமுறை.‌!?

20 Jul, 2026 | 05:07 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களுடைய சொந்த காணி அல்லது வீடு எம்முடைய மண்ணில் பல்வேறு வழக்குகளில் அல்லது சிக்கல்களில் சிக்கி, அதனை விற்க முடியாமல் தவிக்கிறார்கள்.

வேறு சிலர் தங்களுக்கு சொந்தமான காணியை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை வங்கிகளில் முதலீடு செய்து, அதனை தங்களது வாழ்வாதாரமாக உருவாக்கிக் கொள்ள விரும்புவார்கள்.

ஆனால் அதற்கும் பல சிக்கல்கள்- இடையூறுகள் இருக்கும். இந்நிலையில் உங்களுடைய விற்பனையாகாத வீடு அல்லது காணிகளை நல்ல விலையில் விற்பனை செய்வதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில எளிய வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமைகளில் உங்களுடைய காணி தொடர்பான பிரச்சனைகள் நீங்க வேண்டும் என மனதில் தியானித்து, அருகில் இருக்கும் அரசாங்க வைத்தியசாலைகளிலோ அல்லது தரமான தன்னார்வ தொண்டு நிறுவனத்திலோ குருதி கொடையை உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் வயதிற்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறிதளவு மேற்கொள்ளுங்கள்.

அதனைத் தொடர்ந்து நீங்கள் விற்பனை செய்ய உள்ள வீடு அல்லது காலியான காணியின் வட கிழக்கு பகுதியில் உள்ள மண்ணை சிறிதளவு எடுத்து, அதில் செந்தூரத்தை கலந்து, இதனை ஓடும் நதிநீரிலோ அல்லது கடலிலோ செவ்வாய்க்கிழமைகளில் காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளாக கரைத்து விட வேண்டும்.

இப்படி எட்டு செவ்வாய்க்கிழமைகளில் இந்த செந்தூரம் கலந்த மண்ணை கடல் நீரில் கரைத்து வருவதால்.. உங்களுடைய இடம் லாபத்துடன் விற்பனையாகி, அவை எந்தவித சேதாரமும் இல்லாமல் உங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31
news-image

தொழிலில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான சூட்சம...

2026-08-01 17:06:21
news-image

கர்ம வினைகளின் தாக்கத்தை அளிப்பதற்கான பிரத்யேக...

2026-07-31 17:00:24
news-image

ஓகஸ்ட் மாத ராசி பலன்கள் -...

2026-07-31 15:07:30
news-image

நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான எளிய...

2026-07-30 17:19:48
news-image

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பதற்கான சூட்சம வழிமுறை..!?

2026-07-29 17:05:08