நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம் கோரியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை - ஜீ.எல். பீரிஸ்

20 Jul, 2026 | 03:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாக நிரப்புமாறு  சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளபோதும் இதுவரை அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இது இலங்கையின் நீதிமன்றங்கள் குறித்த சர்வதேசத்தின் கெளரவத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையிலும் இந்த விடயம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி இன்று (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நீதிபதிகளின் பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பது குறித்த கலந்துரையாடல் தற்போது சமூகத்தில் எழுந்துள்ளது. இது தொடர்பான பல்வேறு விவாதங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இத்தகைய கோரிக்கை யாரிடமிருந்தும் முன்வைக்கப்படவில்லை. சிவில் சமூகம், சட்டத்தரணிகள் சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் உட்பட பலர் இந்தத் தீர்மானத்துக்குத் தமது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித நிச்சயத்தன்மையும் இல்லை. பிற நாடுகளில் இத்தகைய மாற்றங்களைச் செய்யும்போது, குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் அரசாங்கத்தின் முன்மொழிவுகளை முன்வைத்து பொதுமக்களின் கருத்துக்களைக் கோருவதே மரபாகும். 

உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் இத்தகைய ஒரு விடயத்திற்காக 18 மாத காலத்திற்குள் சுமார் 1,200 கருத்துக்கள் பெறப்பட்டன. ஆனால், எமது நாட்டில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை. அரசாங்கத்தின் முன்மொழிவு என்ன என்பது கூட எவருக்கும் தெரியாது.

மேலும், இதை நீதிபதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது. அவ்வாறெனில், முழு அரச சேவை, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், குறிப்பாக மருத்துவ நிபுணர்கள் போன்றோருக்கும் இந்தச் சலுகையை வழங்கவேண்டும். இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இதுவரை எந்தவித கவனமும் செலுத்தப்படாத ஒரு முக்கிய விடயம் உள்ளது. அதாவது, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

இது மிகவும் விசேடமான ஒரு நடவடிக்கையாகும். இத்தகைய நடைமுறையை வேறு எந்த நாட்டுக்கு எதிராகவும் அவர்கள் பின்பற்றியதில்லை. இலங்கை அரசாங்கம், எமது நாட்டின் அரசியல் தலைவர்கள் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு எதிராக அபாண்டமான குற்றச்சாட்டுகளை சர்வதேச மட்டத்தில் முன்வைத்துள்ளது.

இந்த பேரவை இலங்கைக்காக விசேட பொறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன் நோக்கம், உலகம் முழுவதும் சென்று முப்படைத் தளபதிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் எதிராகச் சாட்சியங்களைத் திரட்டுவதாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் சில நாடுகள், இது பணவிரயம் எனக் கூறி இதை எதிர்த்தன. இருப்பினும், அவற்றை பொருட்படுத்தாமல் அவர்கள் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

எமது அரசாங்க காலத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தபோது, நாங்கள் மிகத் தெளிவான பதிலைக் கொடுத்தோம். இலங்கை மீது எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றமும் தலையிடத் தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது. ஏனென்றால், அனைவருக்கும் கௌரவமான ஒரு நீதித்துறை எமது நாட்டில் இருந்தது. சர்வதேச ரீதியில் நம்பிக்கையை வென்ற, புகழ்பெற்ற நீதித்துறையை நாம் கொண்டிருந்தோம்.எமது நீதித்துறை உலகத்தின் கௌரவத்திற்குப் பாத்திரமான ஒன்றாக இருந்தது. அதுவே எமது பலமாகவும் இருந்தது.

ஆனால் இன்று நீதித்துறை அப்பட்டமாக அரசியலாக்கப்படுகிறது. சில நீதிபதிகளை வீட்டிற்கு அனுப்புவதும், சிலருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் வழங்குவதும் நடைபெறுகிறது. உயர் நீதிமன்றத்தில் நான்கு வெற்றிடங்களும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு வெற்றிடங்களும் உள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதன் மூலம், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்துள்ளது.

வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி அரசியலமைப்பைத் திருத்தும் அரசாங்கம், ஏன் இந்த வெற்றிடங்களை நிரப்பவில்லை? நிறைவேற்று அதிகாரத்தின் பொறுப்பான இந்த விடயத்தைச் செய்யாமல் இருப்பதற்கு ஏதேனும் மறைமுகத் திட்டம் உள்ளதா? சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் அதை காதுகொடுத்துக் கேட்கவில்லை. இது இலங்கையின் நீதிமன்றங்கள் குறித்த சர்வதேச பிம்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அத்துடன் செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு நடைபெறவுள்ளது. இந்த விடயம், இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு தனிநபரின் நன்மைக்காக அல்லது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முழு நாட்டையும் இத்தகைய நெருக்கடிக்குள் தள்ளுவது நியாயமா என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34