கிளிநொச்சி மத்திய கல்லூரி தனது நூறாவது ஆண்டு (1927–2027) வரலாற்றுப் பயணத்தை அடுத்த ஆண்டின் (2027) நடுப்பகுதியில் நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஒரு விழிப்புணர்வு நடைபயணம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) கிளிநொச்சி நகரில் நடைபெறவுள்ளது.
பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு நடைபயணம், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து கிளிநொச்சியின் பிரதான பாதையான ஏ9 வீதி வழியாகப் பயணித்து கிளிநொச்சி மத்திய கல்லூரியை வந்தடையவுள்ளது.
விவசாய மண்ணான கிளிநொச்சியில் 'வந்தாரை வாழவைக்கும்' பெருமைமிகு நிலத்தில், கல்வியறிவை ஊட்டுவதற்காக 1927ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. முப்பதாண்டு கால யுத்தப் பேரவலம், பல இடப்பெயர்வுகள் மற்றும் கட்டமைப்பு அழிவுகள் என மிக மோசமான நெருக்கடிகளுக்கு இப்பாடசாலை முகங்கொடுத்திருந்தது.
யுத்த வடுக்கள் மற்றும் பல்வேறு வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், கல்வி, விளையாட்டு, இணைபாட விதானச் செயற்பாடுகள் என அனைத்துத் துறைகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் நம்பிக்கை ஒளியாகவும் இக்கல்லூரி சாதித்து வருகிறது.
கிளிநொச்சியின் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் தவிர்க்க முடியாத அத்தியாயமாகத் திகழும் மத்திய கல்லூரியின் இந்த நூற்றாண்டு விழிப்புணர்வு நடைபயணத்தில், பாடசாலையின் பழைய மாணவர்கள், கல்விசார் சமூகம், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு பாடசாலை சமூகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM