விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! 

20 Jul, 2026 | 02:00 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவைப் பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார். 

அதன் பின்னர் அந்த உணவை உண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 ஆண்பிள்ளைகளும், 2 பெண்பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த மாணவன் வழமையாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்குக் கொண்டுசென்று பகிர்ந்து உண்பது வழமை எனவும் இன்றைய தினம் (20) சூரியகாந்தி விதைகள் என நினைத்து சூரியகாந்தி விதைகளுடன் வீட்டில் இருந்த ஆமணக்கு விதைகளையும் கொண்டுசென்று பகிர்ந்து உண்டுள்ளார் எனவும் இதனாலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வரும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13