திருகோணமலை உட்துறைமுக வீதியில் அகற்றப்படும் சட்டவிரோத கட்டடங்கள்! 

20 Jul, 2026 | 01:32 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத கட்டடங்கள், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் சட்ட நடவடிக்கையின் பின்னர் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சம்பந்தப்பட்ட தரப்பினரால் இன்று (20) அகற்றப்பட்டது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை, 17.5 அடி அகலம் கொண்ட கட்டடம் ஆகியவை சட்டவிரோதமான முறையில் எவ்வித அனுமதியும் இன்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து, 1988 ஆம் ஆண்டின் 64ஆம் எண் மற்றும் 2011ஆம் ஆண்டின் 49ஆம் எண் சட்டங்களால் திருத்தப்பட்ட, 1981ஆம் ஆண்டின் 57ஆம் எண் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31(2)இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம் அவற்றை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு உடைத்தல் கட்டளையானது 14.07.2025 அன்று ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த உடைத்தல் கட்டளைக்கு எதிராக சம்பந்தப்பட்ட தரப்பினரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த வழக்கானது நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டு உடைத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இந்த சட்டவிரோத கட்டுமானங்கள் இன்றைய தினம் அகற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில மீனவர்கள் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு சுற்றுலா பணியகம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய அரச திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும் தெரிய வருகின்றது. 

அத்துடன் குறித்த பகுதியில் கட்டப்பட்டுள்ள மலசலகூடத்தின் கழிவுகள் நேரடியாக கடலினுள் கலக்கும் அபாயமும், குறித்த கட்டடங்கள் கடல்காட்டியினை மறைக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறை மேம்படும் வகையிலும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் திட்டங்களை மேற்கொண்டு திருகோணமலையை பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறச் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13