உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் கைக்குண்டுகள், வாள்கள் உட்பட பல ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிப்பு 

20 Jul, 2026 | 12:50 PM
image

கண்டி, நத்தரன்பொத்த பகுதியில் உள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் வாடகை வீட்டில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கண்டி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர், குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியால் கண்டியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில், குறித்த வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

வட மாகாண பொலிஸ் பிரிவு ஒன்றில் கடமையாற்றும் இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதோடு கணவன் - மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் பொலிஸார், அந்த ஆயுதங்கள் மேலதிக நடவடிக்கைக்காக பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து பல்லேகலை பொலிஸாரும், கண்டியின் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வயது முதிர்ந்த ஒட்டகச்சிவிங்கி...

2026-08-19 16:29:03
news-image

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில்...

2026-08-19 16:25:49
news-image

''டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 15:45:01
news-image

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச்...

2026-08-19 15:43:18
news-image

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

2026-08-19 15:23:30
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்!

2026-08-19 15:15:38
news-image

உன்னிச்சை – வவுணத்தீவு அபிவிருத்திக்கு காணி...

2026-08-19 15:14:55
news-image

களுவாஞ்சிகுடியில் வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை:...

2026-08-19 14:54:37
news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34
news-image

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி...

2026-08-19 14:44:18
news-image

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச...

2026-08-19 14:53:54
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16