பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கை குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 21 பேர் உட்பட 564 சந்தேகநபர்கள் கைது

20 Jul, 2026 | 12:46 PM
image

(செ.சுபதர்ஷனி)

பொலிஸ் மா அதிபரின் நேரடி அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 21 முக்கிய சந்தேகநபர்கள் உட்பட 564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அனைத்துப் பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியவகையில் வலய மட்டத்திலான பொலிஸ் விசேட சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கடந்த 2026 ஜூலை 19 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 26,849 நபர்கள் பொலிஸாரால் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது, குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் 564 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பகிறங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 344 சந்தேகநபர்கள் மற்றும் நாள் குறிப்பிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 280 நபர்களும் கைதுசெய்து செய்துப்பட்டுள்ளனர்.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 122 சாரதிகளும், ஆபத்தான முறையில் அலட்சியமாகவும், கவனயீனத்துடனும் வாகனம் செலுத்திய 93 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட் ட 4225 பேருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13