நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனைகளின் போது 280 லீற்றருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) நீர்கொழும்பு, நாகொல்லாகம மற்றும் மஹபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த முற்றுகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு - தளுபொத்த பகுதி
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளுபொத்த பகுதியில் நீர்கொழும்பு பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 52 லீற்றர் 500 மில்லி லீற்றர் (70 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். அவர் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாகொல்லாகம - தல்கொட்டேவத்தை பகுதி
நாகொல்லாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்கொட்டேவத்தை பகுதியில் நிகவெரட்டிய பிராந்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 78 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார். இவர் நாகொல்லாகம பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மஹபாகே - தொடுபொல வீதி பகுதி
மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடுபொல வீதி பகுதியில் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 150 லீற்றர் (200 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார். அவர் மேலதிக விசாரணைகளுக்காக மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM