திரு­கோ­ண­மலை பொதுச் சுகா­தார பகு­தி­க­ளுக்­குட்­பட்ட நகர வீதி­களில் குப்­பை­களை வீசிய குற்­றச்­சாட்டில் தலை­மை­யக பொலிஸ் சுற்­றாடல் பிரி­வி­னரால் கைது­செய்­யப்­பட்ட 14 பேருக்கும் தலா 5000 ரூபா அப­ராதம் விதித்து திரு­கோ­ண­மலை நீதி­மன்ற பிர­தான நீதிவான் எம்.எச். எம். ஹம்ஸா நேற்று முன்­தினம் உத்­த­ர­விட்டார்.

பாலை­யூற்று இலிங்­க­நகர், அநு­ரா­த­புரச் சந்தி மற்றும் உவர்­மலை பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை டெங்கு நுளம்­புகள் பரவும் விதத்தில் சுற்­றுச்­சூ­ழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் கைது ­செய்­யப்­பட்ட 8 பேருக்கு தலா 1500  ரூபா அபராதம் செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.