அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை (19) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு 'அலெக் நீல் வான்ஸ்' எனப் பெயரிட்டுள்ளதாகத் தம்பதியினர் சமூக ஊடகப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள வோல்டர் ரீட் தேசிய இராணுவ வைத்தியசாலையில் குழந்தை பிறந்துள்ளது.
"எங்களது ஆண் குழந்தை அலெக் நீல் வேன்ஸ் பிறந்த செய்தியைப் பகிர்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். உஷாவும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். எங்களது மற்றைய மூன்று குழந்தைகளும் தங்களது தம்பியைச் சந்தித்ததில் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்" என பதிவிட்டுள்ளடன், மருத்துவக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு துணைத் தலைவருக்குக் குழந்தை பிறப்பது 156 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதன்முறையாகும் என அசோஷியட் பிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 1870 ஆம் ஆண்டில், அன்றைய அமெரிக்க ஜனாதிபதி யூலிசிஸ் எஸ். கிராண்டின் நிர்வாகத்தில் துணைத் தலைவராக இருந்த 'ஸ்கைலர் கொல்பாக்ஸ்' பதவியில் இருந்தபோது அவருக்குக் குழந்தை பிறந்ததே இறுதி நிகழ்வு எனத் தெரிவிக்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதியினருக்கு ஏற்கனவே ஈவான் (9 வயது), விவேக் (6 வயது) ஆகிய இரு மகன்களும், மிரேபல் (4 வயது) என்ற ஒரு மகளும் உள்ளனர். உஷா வேன்ஸின் பெற்றோர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
உஷா 2010 இல் யேல் சட்டக் கல்லூரியில் கல்வி கற்ற போதே ஜே.டி. வான்ஸைச் சந்தித்துள்ளார்.
ஜே.டி. வான்ஸ் தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆரம்பத்தில் உஷாவுக்கு 4 ஆவது குழந்தை பெற்றுக்கொள்வதில் சில தயக்கங்கள் இருந்தன. எனினும், கடந்த ஆண்டு மறைந்த பழமைவாதச் செயற்பாட்டாளரான சார்லி கெர்க் என்பவரின் மனைவியின் உரையாடலுக்குப் பின்னரே, தாங்கள் 4 ஆவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் முடிவிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM