குருநாகல் - புத்தளம் வீதியின் பரமாகந்த சந்திக்கருகில் உள்ள தோனிகல, நவ கம்மன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை (20) காலை 7.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி, வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது சாரதியின் அலட்சியப் போக்கு காரணமாக, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM