நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 2,652 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அண்மைய தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு வலயங்களாக தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் 8,590 நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மட்டும் 20,666 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொற்றினால் 53 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது.
நாட்டின் மொத்த நோயாளர்களில் 52.61% (40,009 நோயாளர்கள்) மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 11,707 நோயாளர்களும் , மத்திய மாகாணத்தில் 6,431 நோயாளர்களும் (8.46%) பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 15,910 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் மட்டும் 3,073 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர, மாத்தறை மாவட்டத்தில் 5,330 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,111 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,010 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
தற்போது நிலவும் மழைக்கால நிலையைக் கருத்திற் கொண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை அழித்துத் தங்களது சூழலைத் தூய்மையாக வைக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM