மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

20 Jul, 2026 | 11:08 AM
image

(நெவில் அன்தனி)

நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பீபா உலகக் கிண்ண 2026 இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டினாவை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய ஸ்பெய்ன் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது.

போட்டியின் 62ஆவது  நிமிடத்தில்  மாற்று வீரராக களம் புகுந்த ஃபெரான் டொரெஸ் மேலதிக நேரத்தின் 106ஆவது நிமிடத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது.

23ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தோல்வி அடையாத அணிகளாக ஆர்ஜன்டினாவும் ஸ்பெய்னும் மோதிக்கொண்ட இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் முழுமையான ஆதிக்கம் செலுத்தி கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தது. 

ஆனால் ஆர்ஜன்டீன கோல் காப்பாளர் எமிலியானோ மார்ட்னெஸ் மின்னல் வேகத்தில் செயல்பட்டு 16 முயற்சிகளைத் தடுத்து நிறுத்தி ஸ்பெய்னை பிரமிப்பில் ஆழ்த்திய வண்ணம் இருந்தார்.

போட்டி முழு நேரத்தைத் தொட்டு உபாதையீடு நேரத்திற்குள் சென்றபோது ஆர்ஜன்டீன பின்கள வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் ஆபத்தான வகையில் முரட்டுத்தனமாக ஸ்பெய்ன் வீரரை தாக்கியதால் மத்தியஸ்தரின் இரண்டாவது மஞ்சள் அட்டையுடன் சிவப்பு அட்டைக்கு இலக்காகி வெளியேறினார்.

இதனை அடுத்து பத்து வீரர்களுடன் விளையாடிய ஆர்ஜன்டீனா தொடர்ந்து திறமையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தது.

போட்டி முடிவுக்கு வந்தபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிராததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தின் 100ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் போட்ட கோல் விதிமீறல் காரணமாக மத்தியஸ்தரினால் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், 106ஆவது நிமிடத்தில் வலப்புறத்திலிருந்து பெட்ரோ போரோ, எதிரணி கோலை நோக்கி உயர்வாகப் பரிமாறிய பந்தை  நிக்கோ வில்லியம்ஸ், கோல் எல்லைக்கோட்டின் விளிம்பில் இருந்தவாறு பெனால்டி எல்கைக்குள் தலையால் முட்டிவிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் ஃபெரான் டொரெஸ் ஓங்கி உதைத்து பந்தை கோலினுள் புகுத்தினார்.

ஸ்பெய்ன் தனது 20ஆவது முயற்சியிலேயே கோல் போட்டது.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் ஆர்ஜன்டீனாவுக்கு கோல் நிலையை சமப்படுத்தக் கிடைத்த வாய்ப்பு நூலிழையில் தவறிப்போக ஸ்பெய்ன் உலக சம்பியனானது.

இந்த உலகக் கிண்ணத்தில் 8 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மாத்திரம் ஒரே ஒரு கோலை மாத்திரம் விட்ட ஸ்பெய்ன் கோல்காப்பாளர் யூனை சைமன், சிறந்த கோல்காப்பாளருக்கான தங்கக் கையுறையை வென்றெடுத்தார்.

மொத்தமாக 10 கோல்களைப் போட்ட பிரான்ஸ் வீரர் கிலியான் எம்பாப்பே அதிக கோல் போட்ட  வீரருக்கான தங்கப் பாதணியை தனதாக்கிக்கொண்டார்.

இந்த உலகக் கிண்ணத்தில் அதிசிறந்த வீரருக்கான  தங்கப் பந்து விருதை ஸ்பெய்ன் அணித் தலைவர் ரொட்றி வென்றெடுத்தார்.

ஸ்பெய்ன் பின்கள வீரர் பௌ கியூபார்சி மிகச் சிறந்ந இளம் வீரர் விருதை வென்றெடுத்தார்.

இறுதி ஆட்டநாயகன் விருது ஃபெரான் டொரெஸுக்கு கிடைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

16 வயதின் கீழ் பாடசாலைகள் கால்பந்தாட்டம்...

2026-08-19 19:48:07
news-image

இலங்கையுடனான முதலாவது டெஸ்டில் இந்தியா 165...

2026-08-19 15:09:56
news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56