சுற்றுலா வளர்ச்சியின் புதிய மையமாக உருவெடுக்கும் நக்கில்ஸ் மலைச்சாரல் பகுதியை ஒட்டிய பன்வில

Published By: Digital Desk 3

20 Jul, 2026 | 10:04 AM
image

கண்டி–மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள நக்கில்ஸ் மலைச்சாரல் பகுதியை ஒட்டிய பன்வில பிரதேச சபைப் பகுதி, அண்மைக் காலமாக சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

ஹுலுகங்கை, லெபனன், சோடி எல்ல, சாரி எல்ல, உன்னஸ்கிரிய மற்றும் ராஸ் எல்ல உள்ளிட்ட பல அழகிய நீர்வீழ்ச்சிகள் இப்பகுதியில் அமைந்துள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்த்து வருகின்றன.

மேலும், ஹாத்தலையில் அமைந்துள்ள தேயிலை கைத்தொழில் சுற்றுலாத் தளம், செம்புவத்தை தடாகம், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் ரிவஸ்டன் போன்ற முக்கிய சுற்றுலா மையங்களும் இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வருகின்றன.

தற்போதைய கோடைக்காலத்திலும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் ஏராளமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்த வருகையைக் கருத்தில் கொண்டு, பன்வில பிரதேச சபையால் சில இடங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, புதிய சுற்றுலா விடுதிகள், தங்குமிடங்கள் மற்றும் சுற்றுலா குடில்கள் பலவும் இப்பகுதியில் உருவாக்கப்பட்டு, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59
news-image

பண்டாரகமையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி...

2026-08-16 15:16:52