தங்காலை - மாத்தறை வீதியில் சொகுசு ஜீப் வண்டி - லொறி மோதி விபத்து: இருவர் பலி, இருவரின் நிலை கவலைக்கிடம்!

20 Jul, 2026 | 09:59 AM
image

தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையில் இருந்து தங்காலை திசையை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வண்டி ஒன்றும்,  தங்காலை பகுதியில் இருந்து மாத்தறை நோக்கிச் சீமெந்து மூட்டைகளை ஏற்றி வந்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து நடந்த வேளையில் சொகுசு ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் 07 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இருவரும் மாத்தறை - ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 37,36 வயதுடையவர்கள் ஆவார்.

இதேவேளை, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான சொகுசு ஜீப் வாகனத்தை இளைஞர்கள் குழுவொன்று ஒரு நாள் வாடகை அடிப்படையில் பெற்றுப் பயணித்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக ஜீப் வண்டியும் லொறியும் கடுமையாகச் சேதமடைந்துள் நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  மாத்தறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13
news-image

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அடையாளம்...

2026-08-16 16:14:05
news-image

சமூக ஊடகங்களில் அவதூறு : குற்றப்புலனாய்வு...

2026-08-16 16:25:53
news-image

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூடு: இலக்கு மாறியதால்...

2026-08-16 15:57:49
news-image

மீரிகமவில் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்களில்...

2026-08-16 15:45:29
news-image

கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர்...

2026-08-16 15:38:28
news-image

வவுனியாவில் வீடு உடைத்து பெண் கூட்டு...

2026-08-16 15:31:17
news-image

வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் இளைஞர் கைது!

2026-08-16 15:23:59
news-image

பண்டாரகமையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி...

2026-08-16 15:16:52