மத்­தள விமான நிலை­யத்தை அர­சாங்கம் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் தீர்­மா­னத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து இன்று அம்­பாந்­தோட்டை மத்­த­ளயில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு ­செய்­துள்­ளது.குறித்த ஆர்ப்­பாட்டம் இன்று காலை ஒன்­பது மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

 

அவ் ஆர்ப்­பாட்­டத்தில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் மற்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் முன்னாள் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொள்­ளவுள்ளனர். மேலும் தொழிற்­சங்­கங்கள், இளைஞர் அமைப்­புகள், பெண்கள் அமைப்­புகள் உட்­பட பெருந்­தி­ர­ளானோர் ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்டு மத்­தள விமான நிலையம் இந்­தி­யா­விற்கு வழங்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராக தமது எதிர்ப்­பினைத் தெரி­விக்­க­வுள்­ள­தாக ஏற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழகப்பெரும தெரி­விக்­கையில்,

அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக நாட்டு வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்து வரு­கி­றது. அதன் வரி­சையில் மத்­தள விமான நிலை­யத்­தையும் இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அந்­ந­ட­வ­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தே நாளை (இன்று) அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு ஏற்­பா­டு ­செய்­துள்ளோம்.

மத்­தள விமான நிலையம் உள்­ளிட்ட முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிலை­யான அபி­வி­ருத்­தி­களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் மேற்­கொண்­டி­ருந்தார். எனினும் கடந்த அர­சாங்­கத்தின் மீதுள்ள கோபம் கார­ண­மாக நல்­லாட்சி அர­சாங்கம் மத்­தள விமான நிலை­யத்தில் நெல்லை களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் தற்­போது அவ்­வி­மான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

 உல­கி­லுள்ள மிகவும் பெரிய விமா­னங்கள் தரை­யி­றங்கும் வச­தி­கொண்ட விமான நிலை­யங்கள் தென்­னா­சி­யாவில் இரண்டு அல்­லது மூன்றே உள்­ளன. அவற்றில் மத்­தள விமான நிலை­யமும் ஒன்­றாகும். மேலும் மத்­தள விமான நிலையம் 4942 ஏக்­க­ருக்கும் அதி­க­மான நிலப்­ப­ரப்பைக் கொண்­ட­தாகும். 

அத்­துடன் விமான ஓடு­பாதை 3500 மீற்றர் தூரத்­தையும் 75 மீற்றர் அக­லத்­தையும் கொண்­டது. எனவே குறித்த விமான நிலையம் நாட்­டிற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

அம்­பாந்­­தோட்டை துறை­முகம் சீனா­விற்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆகவே இந்­தி­யாவை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். 

மேலும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கே குறித்த விமான நிலை­யத்தை இந்­தி­யா­விற்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கி­றது. எனினும் விமான நிலை­யத்தை அமைப்­ப­தற்கு ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் 209 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செல­வி­டப்­பட்­டது.

எனினும் தற்­போது விமான நிலையம், அதற்­கான காணி, தொழில் அபி­வி­ருத்தி வல­யத்­திற்கு உட்­பட்ட காணிகள் உள்­ள­டங்­க­லாக பெரும்­ப­ரப்­புக்­கொண்ட காணி­யி­னையும் 205 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­பனை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை இவ் ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை நீதிவான் நீதி­மன்றம் தடை­யுத்­த­ர­வொன்றைப் பிறப்­பித்­துள்­ளது. குறித்த ஆர்ப்­பாட்டம் தொடர்பில் அம்­பாந்­தோட்டை பொலிஸார் நீதி­மன்­றிற்கு அறிக்கை சமர்ப்­பித்­ததைத் தொடர்ந்தே குறித்த தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே அவ் ­ஆர்ப்­பட்­டத்தின் பிர­தான ஏற்­பாட்­டா­ளர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜபக் ஷ, டி.வி.சானக உள்ளிட்டோர் நீதிமன்ற அதிகாரப் பிரதேசத்தில் பாதைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், இந்திய தூதரக காரியாலயம், மாகம்புற துறைமுகம் உட்பட பிரதான வீதிகளின் நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தலை தவிர்க்குமாறும் குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.