நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை நீடிக்கவேண்டும். அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். அதில் சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடவேண்டும். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம். அந்த கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு வழங்கவும் மாட்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றம் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு குறித்து விபரிக்கையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி முறைமையை முற்றாக நீக்குவதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும் என்பதே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியில் சர்வஜன வாக்கெடுப்பிற்கு செல்லாதவகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் செய்யப்படும் என கூறியிருந்தார்.
ஆனால் சோபித்த தேரரின் மறைவின் போது அவர் ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பதாக கூறியிருந்தார்.
இருப்பினும் சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடானது ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும் என்பதாகும். அதன்படி 2021 ஆம் ஆண்டு அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவேண்டும். அதில் சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடவேண்டும்.
அவர் அவ்வாறு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது எனக்கூறினால் அது தொடர்பில் நாம் சிந்திக்கலாம். ஆனால் கட்சியின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணப்படுகின்றார். அவர் கட்சிக்கு பாரிய ஜனநாயக கட்டமைப்பை வழங்கியிருக்கிறார். முன்னர் இல்லாத ஜனநாயக கட்டமைப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த ஜனநாயக கட்டமைப்பிற்குள் இருந்துதான் நாங்கள் செயற்படுகின்றோம். அந்தவகையில் ஜனாதிபதி முறைமை நீடிக்கவேண்டும் என்பதும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும். அதனை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM