டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தை கடந்தது

Published By: Vishnu

19 Jul, 2026 | 06:52 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்த நோயாளர்களில் 37 பேர் பெண்கள் ஆவர். மேலும் இதுவரை அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 18ஆம் திகதி சனிக்கிழமை (18) வரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 75 ஆயிரத்து 321 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதத்தில் கடந்த 18 நாட்களில் 19,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் வெகுவாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்தோடு டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்வடைந்துள்ளதோடு, டெங்கு பரவலைக் கருத்தில் கொண்டு 162 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் 39,667 (52.66 சதவீதம்) நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, தென்மாகாணத்தில் 11,610 (15.41 சதவீதம்) நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா, கொழும்பு, மாத்தறை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தொட்டை, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாவதைக் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக தற்போது வரை உயிரிழந்துள்ள நோயாளர்களில் 37 பேர் பெண்கள் எனவும் 5பேர் சிறுவர்கள் எனவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரச வைத்தியசாலைகள் பலவற்றில் டெங்கு நோயாளர்கள் வார்டுகள் நிரம்பியுள்ள நிலையில், வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நோயாளர்களுக்கான சிகிச்சைச் சேவைகளை வழங்கிவருகின்றனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவிக்கையில், டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களில் 37 பேர் பெண்களாக உள்ளனர். ஆகையால் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் தகுதிவாய்ந்த வைத்தியரை அனுகி ஆலோசனை பெறுவது அவசியம். பெண்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் ஓய்வெடுக்காது வீட்டு வேலைகளில் ஈடுபடுவதால் சிகிச்சை தாமதமாகி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழப்புகள் சம்பவிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 843 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்கு மேல் காச்சல் நீடிக்குமாயின் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். கைமருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வைத்திய சிகிச்சையை பெறுவதே சிறந்தது. ஆகையால் டெங்கு பரவலை கருத்தில் கொண்டு சுற்றுபுற சூழலை சுத்தமாக வைத்திருப்பது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50