விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி நூதன முறையில் திருடி வந்த நபர் மட்டக்களப்பில் கைது!

19 Jul, 2026 | 05:54 PM
image

மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை வாங்குவது போல் நடித்து, அவற்றை ஓடிப்பார்ப்பதாகக் கூறி திருடிச் சென்ற நூதன திருடன் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம்  ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

அங்கு விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதாகக் கூறி, அதனை ஓடிப்பார்ப்பதற்கு  அனுமதி கேட்டுள்ளார். அதனை நம்பிய கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளைத் திருடிக்கொண்டு தப்பிய சந்தேகநபர், மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் உள்ள வீதிச் சமிக்ஞை விளக்குக்கு  அருகில் வந்து அதனை நிறுத்தியுள்ளார். பின்னர், Ikman.lk இணையத்தளத்தில் தனது மோட்டார் சைக்கிளை விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்தியிருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தொடர்பு கொண்டுள்ளார். தான் அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகக் கூறி, அவரைத் தான் நின்ற வீதிச் சமிக்ஞை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு கொக்கட்டிச்சோலை நபர் மோட்டார் சைக்கிளுடன் வந்ததும், அவரிடமும் அதனை ஓடிப்பார்ப்பதாகக் கூறியுள்ளார். அதற்காக, தான் காத்தான்குடியில் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிளை அந்த நபரிடம் அடகாகக் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, கொக்கட்டிச்சோலை நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இவ்வாறு திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை அவர் வாகரை பகுதியில் விற்பனை செய்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோன்றதொரு முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடி விற்பனை செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இவர் கடந்த காலங்களில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ள ஒரு பழைய குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21