நீதித்துறையை பாதுகாக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைய வேண்டும் – ஸ்ரீநாத் பெரேரா!

19 Jul, 2026 | 05:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தமது மனதில் உள்ள நோக்கத்தை முன்கொண்டு செல்வதற்காக நீதியரசர்களுக்கான நியமனங்களை வழங்குதல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற பிரச்சினை காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தரணிகள் சமூகம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனால் நாம் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகலாம்.சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறையை பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா அழைப்பு விடுத்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் செயற்பாடுகள் குறித்து மக்களை தெளிவுப்படுத்துவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறேன்.

1978 ஆம் ஆண்டு இரண்டாம் அரசியலமைப்பு யாப்பில் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலம் 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதியரசர்களின் பதவி காலம் 63 ஆகவும் வரையறுக்கப்பட்டது.

அன்று முதல் இன்றுவரையில் எவ்விதமான சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் நீதியரசர்கள் பதவி வகித்தார்கள், உரிய காலத்தில் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றார்கள்.

உலகளாவிய மோதல் காரணமாக பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அரசாங்கம் தேவையற்ற பிரச்சினை மற்றும் சிக்கலை முன்வைத்துள்ளது.

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடவில்லை'அதேபோல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் சமூகம் உட்பட நாட்டு மக்கள் நீதியரசர்களின் பதவி காலம் வரையறுக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பாரதூரமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடவில்லை.

இவ்வாறான பின்னணியில் நீதியரசர்களின் பதவி காலத்தை அவசரமாக அதிகரிப்பதற்கான காரணம் குறித்து அரசாங்கம் இதுவரையில் சட்டத்தரணிகள் சமூகத்துக்கு தெளிவுப்படுத்தவில்லை.இவ்வாறான நிலையில் நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் என்னுள் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் இரகசியமான முறையில் நீதியரசர்களி;ன் பதவி காலத்தை நீட்டிக்க அரசாங்கம் முயற்சிப்பது ஏதேனும் உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது தெளிவாக விளங்குகிறது.

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதன் பின்னர் ஏற்படும் வெற்றிடம் தாமதமில்லாமல் நிரப்பப்படும். ஆனால் அண்மை காலமாக உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் காணப்படும் 08 நீதியரசர்களுக்கான வெற்றிடத்துக்கு இதுவரையில் நியமனம் வழங்கப்படவில்லை.இதனால் பெருமளவிலான வழக்குகள் நிலுவையில் காணப்படுகின்றன. ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் இது தெரியவில்லை.

தமது மனதில் உள்ள நோக்கத்தை முன்கொண்டு செல்வதற்காக நீதியரசர்களுக்கான நியமனங்களை வழங்குதல் இழுத்தடிக்கப்படுகிறது என்ற பிரச்சினை காணப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான இந்த செயற்பாட்டுக்கு எதிராக சட்டத்தரணிகள் சமூகம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இதனால் நாம் பல விமர்சனங்களுக்கும் உள்ளாகலாம்.சட்டத்தின் ஆட்சியையும், நீதித்துறையை பாதுகாப்பதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50