(செ.கவிஷனா)
ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 90,122 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து மாத்திரம் 20,480 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இது ஒட்டுமொத்த வருகையில் 23 சதவீதமாகும் என்று அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இக்காலப்பகுதியில் சீனாவிலிருந்து 5,494 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,277 பேரும், அவுஸ்ரேலியாவிலிருந்து 5,487 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது. இவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 117,844 பேரும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா விசேட அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலமாக இலங்கை 475.6 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 50.5 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM