பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி: கேரளாவில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை 

Published By: Digital Desk 3

19 Jul, 2026 | 05:08 PM
image

2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை முன்னிட்டு, நாளை (20) திங்கட்கிழமை கேரளாவில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அமெரிக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய நேரப்படி திங்கட்கிழமை (20) அதிகாலை 12.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகிறது.

கால்பந்தை தீவிரமாக நேசிக்கும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கேரள பொதுக் கல்வித்துறை அமைச்சர் என். சம்சுதீன் தெரிவித்துள்ளார். போட்டி அதிகாலை வரை நீடிக்கக்கூடும் என்பதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறையால் ஏற்படும் கல்வி நாள் இழப்பை ஈடுசெய்ய, பின்னர் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாக அறிவிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கால்பந்து காய்ச்சல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், போட்டி நேரத்தில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08