புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்கு ஆபத்து என்று தெற்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிப்­ப­தைப் ­போ­லவே வட­கி­ழக்கு இணைப்பு நடக்­கப்­போ­கின்­றது என  வடக்­கு-­கி­ழக்­கிலும்  குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர். இது இன­வா­தத்­திற்கு தீனி போடும்  மிகவும் திட்­ட­மிட்டு செய்யும் நகர்­வாகும் என சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான  ரவுப் ஹக்கீம் தெரி­வித்தார். 

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களில்   முஸ்லிம் தலை­மைகள் ஒரு­போதும் குறுக்கே நிற்­காது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தேர்தல் திருத்­தங்­களும் இடைக்­கால அறிக்­கை­யும்­என்ற தெளி­வூட்டல் செய­ல­மர்வு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

பாரா­ளு­மன்­றத்தில்  வழி­ந­டத்தல் குழு , அர­சியல் நிர்­ணய சபை இவற்றின் முயற்­சி­களின் பின்னர் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்பில் எங்­க­ளுக்குள் பலர் பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.  விகி­தா­சார தேர்தல் முறைமை மாற்­றப்­பட்டு விட்­டது என ஒரு­சிலர் எண்­ணிக்­கொண்­டுள்­ளனர். இது பிழை­யான விட­ய­மாகும். உறுப்­பினர் தெரிவு விகி­தா­சார முறை­யி­லேயே இடம்­பெறும். இதில் மாற்றம் இல்லை.

ஆனால் அதற்கு புறம்­பாக தொகு­தி­வா­ரியில் வெற்­றி­பெற்­றவர்  முறை­மையும் அறி­விக்­கப்­படும். விருப்பு வாக்கு முறை­மையில் மட்­டுமே மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லேயே நாம் கடந்த காலத்தில் இருந்து மிக நீண்­ட­கால போராட்டம் ஒன்றை முன்­னெ­டுத்து இன்று கணி­ச­மான வெற்­றி­யினை  பெற்­றுள்ளோம். 70ற்கு  30 என இருந்த தேர்தல் முறை­மையில் 60ற்கு 40 என்ற ரீதியில் கொண்­டு­வர நீண்­ட­தொரு போராட்­டத்தை நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். மாகா­ண­சபை முறை­மை­யிலும் 50ற்கு 50 என கொண்­டு­வந்­த­துடன்  சிறு­பான்மை மக்­க­ளுக்கு மிக சாத­க­மான முறைமை என்ற கார­ணத்­தினால் இதிலும் ஒரு வெற்றி பெற்­றுள்ளோம். 

எனினும் இரண்டு பிர­தா­ன­மான கட்­சி­களும் இதை கையாள்­வது தனி ஆட்சி அமைப்­ப­தற்­கா­க­வே­யாகும். அதற்­கா­கவே விகி­தா­சார முறை­மையை   அவர்­க­ளுக்கு ஏற்­றால்போல் மாற்றி அமைத்­துக்­கொள்­கின்­றனர். இதற்­காக கூப்­பா­டு­போடும் சிலரும் எம்மில் உள்­ளனர். எல்லை நிர்­ணயம் என்­பதில் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு பாரிய அநீதி இழைக்­கப்­பட்­டது. அர­சாங்­கத்தில் சிலரும் வேண்­டு­மென தமக்கு சாத­க­மான முறையில் எல்லை நிர்­ணய முறை­மையில்  மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றனர். எல்லை நிர்­ணய குழுவில் கூட பக்­க­சார்­பான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றுள்­ளன. சிறு­பான்மை மக்­களின் பிர­தி­நி­திகள் நிரா­க­ரிக்­கப்­பட்டு சிங்­க­ள­வர்­களை கொண்டு எல்லை நிர்­ணய குழு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் நாம்  முரண்­பட்டே மாற்­றத்­தினை கொண்­டு­வந்தோம். 

சட்­டங்கள் தெரி­யாத நபர்கள் தான் இன்று அர­சியல் கட்­சியின் தலை­வர்­க­ளாக உள்­ளனர். அதே­நேரம் வேண்­டு­மென்று திரித்­துக்­கூறும் நபர்­களும் பொய்­களை நம்­பிக்­கொண்டு பாமர மக்கள் மத்­தியில் விப­ரீ­தத்தை உரு­வாக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மதத்­திற்கு ஆபத்து என்ற தெற்கின் அச்சக் கருத்­தினை போலவே வட­கி­ழக்கு இணைப்பு நடக்­கப்­போ­கின்­றது என முஸ்லிம் பிர­தி­நி­திகள் சிலரும் இன்­னு­மொரு குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இது இன­வா­தத்­திற்கு தீனி போடும் ஒரு செயற்­பா­டாக மிகவும் திட்­ட­மிட்டு செய்யும் நகர்­வாகும். 

சிறு­பான்மை மக்­களின் அர­சியல் தீர்வு வருமா வராதா என போரா­டிக்­கொன்று செயற்­படும் நிலையில் திட்­ட­மிட்டு நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சி­கின்­றனர். வடக்கில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை பழி  கூறியே அர­சியல் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்­கத்­திலும் கிழக்கில் முஸ்லிம் காங்­கி­ரசை பழி கூறியே அர­சியல் செய்ய வேண்டும் என்ற நிலை­யிலும்  வட­கி­ழக்கு இணைப்­புக்கு எதி­ராக நாடகம் அரங்­கேற்றி வரு­கின்­றனர். 

தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களில் குறுக்கே ஒரு­போதும் முஸ்லிம் தலை­மைகள் நிற்­காது. அவ்­வாறு பார்க்­கப்­பட வேண்­டிய அவ­சியம் இல்லை என்ற மிகவும் காத்­தி­ர­மான கொள்­கையில் நாம் உள்ளோம். தமி­ழர்­களின் அபி­லா­சை­களை அவர்கள் முன்­வைப்­பார்கள். வடக்கு கிழக்கு இணைப்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருந்தோம். 

அதற்­கான காரணம் தெரி­விக்க அவ­சியம் இல்லை. எனினும் அதன் விளை­வு­களை நாம் ஆழ­மாக சிந்­தித்தோம். வடக்கு கிழக்கு இணைந்தால் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வொரு அலகு கட்­டாயம் வழங்­கப்­பட வேண்டும் என்­ப­திலும்  நாம் கவ­ன­மாக இருந்தோம். இப்­போதும் நாம் அநா­வ­சி­ய­மான கருத்­துக்­களை முன்­வைத்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த அவ­சியம் இல்லை. எமது அபி­லா­சைகள் இணைப்பை தடுப்­ப­திலும் பிரிப்பை கேட்­ப­திலும்   மாத்­திரம் என நம்­பிக்­கொண்­டி­ருப்­பது தவ­றாக கருத்­தாகும். நாம் இணைந்­தாலும் பிரிந்­தாலும் எமக்கு அலகு வேண்டும். இந்த நாட்டில் நாம்  தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல.  நாம் நடுநிலையான ஒரு சமூகம்.  எனவே யாரோ  ஒருவருக்கு தீனி போட  நாம் தயாராக இல்லை. நாம் மிக தெளிவாக இந்த விடயங்களை கலந்துரையாட வேண்டும்.  முஸ்லிம்களுக்கான கரையோர நிர்வாக மாவட்டம் வேண்டும் என்பதை தெளிவாக வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அது  நிராகரிக்கப்பட்டபோதும் நாம் பாராளுமன்றத்தில் காத்திரமாக தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.