120 பயனாளிகளுக்கு கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கிவைப்பு!

19 Jul, 2026 | 04:36 PM
image

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த 1 ஏக்கர் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிந்துரைக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், 20 உற்பத்தியாளர் குழுக்களைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு (ஒவ்வொரு குழுவிலும் ஆறு உறுப்பினர்கள்) ஆரம்பக்கட்ட தள அனுமதிக்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இதன் மூலம், அவர்கள் கடல் அட்டை வளர்ப்பிற்கான நீரியல் வளர்ப்பு முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தை (Aquaculture Management Licence) பெற்றுக்கொண்டு உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அடுத்த கட்டத்திற்கு முன்னேறவுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கடல் அட்டை வளர்ப்பு என்பது கடற்கரை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உருவாக்கும் முக்கிய துறையாக இருப்பதுடன், நாட்டின் நீலப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும், சமூக அடிப்படையிலான நீரியல் வளர்ப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் கடற்றொழில் அமைச்சு தொடர்ந்தும் உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மபிரிய, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர்  வனஜா செல்வரத்தினம், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண உதவி பணிப்பாளர் பீ. நிருபராஜ், ஊர்காவற்துறை கடற்றொழில் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் மற்றும் NAQDA-வின் அதிகாரிகள், உற்பத்தியாளர் குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42