79 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் விமானநிலையத்தில் கைது

19 Jul, 2026 | 04:11 PM
image

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவந்த  இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் இந்தியாவில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இந்தச் சிகரெட் தொகையைக் கம்போடியாவில் இருந்து கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் நகரை வந்தடைந்துள்ளனர்.

அங்கிருந்து ஏயார் ஏசியா  விமான சேவைக்குச் சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் இன்று  (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளை  அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய  266 சிகரெட் கார்டூன்களில்  அடைக்கப்பட்டிருந்த 53,200 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு இந்தியப் பிரஜைகளும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட...

2026-08-19 19:56:00
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 19:41:40
news-image

இலங்கை - வியட்நாம் இருதரப்பு உறவை...

2026-08-19 19:18:47
news-image

கொழும்பு கோட்டைப் பகுதியை சுற்றுலாத் தலமாக...

2026-08-19 19:06:36
news-image

“டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 18:59:55
news-image

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் :...

2026-08-19 18:35:38
news-image

கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து...

2026-08-19 18:13:39
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-19 18:10:44
news-image

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக...

2026-08-19 17:47:49
news-image

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு;...

2026-08-19 17:44:53
news-image

புத்தள களப்பில் கடற்படையினர் விசேட சோதனை:...

2026-08-19 17:48:48
news-image

செப்டெம்பர் முதல் அனைத்து வாகன தண்டப்...

2026-08-19 17:27:49