தமது அர­சியல் தீர்வுப் பய­ணத்தில்  பெரும் இழப்­புக்­களை சந்­தித்து வந்­துள்ள தமிழ் மக்கள் இன்று  ஏக்­கிய மற்றும்  ஒரு­மித்த நாடு என்ற முறையின் கீழ்  அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முன்­வந்­துள்­ளமை பாரிய திருப்­பு­மு­னை­யாகும். எனவே அந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண முடி­யா­விடின் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு­போதும்  தீர்வைக் காண­மு­டி­யாது. தமிழ் மக்கள் இத­னை­விட கீழே இறங்கி வரு­வார்கள் என நாம் ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும்,  இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான   டிலான் பெரேரா தெரி­வித்தார். 

எனினும் இந்த ஏக்­கிய மற்றும் ஒரு­மித்த என்ற விட­யங்­களை வைத்­துக்­கொண்டு  தெற்கில் விமல் வீர­வன்ச, தினேஷ் குண­வர்த்த உள்­ளிட்­ட­வர்­களும் வடக்கில் விக்­கி­னேஸ்­வரன்,   சிவா­ஜி­லிங்கம்  உள்­ளிட்­ட­வர்­களும்  இன­வாத ரீதியில் செயற்­பட்டு வரு­கின்­றனர்.  அவர்­களின் இன­வாத செயற்­பாட்டை  தோற்­க­டிக்க அனை­வரும் முன்­வ­ர­வேண்டும் என்றும்  டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார். 

இதே­வேளை தற்­போ­தைய இந்த தீர்க்­க­மான இந்த சூழலில் முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­திகள் இதனை குழப்­பி­வி­டாமல்  ஒரு நிரந்­தர தீர்வைக் காண   ஒத்­து­ழைப்பை வழங்­கு­வார்கள் என நம்­பு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை மற்றும் ஏக்­கிய, ஒரு­மித்த  விவ­கா­ரங்கள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:-

சிங்­க­ளத்தில் ஏக்­கிய என்ற சொற்­பி­ர­யோ­கத்­தையும், தமிழில் ஒரு­மித்த நாடு என்ற சொற்­பி­ர­யோ­கத்­தையும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு இடைக்­கால அறிக்­கையில் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் எவ்­வி­த­மான   தவறும் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.  தமிழ் பிர­தி­நி­திகள் சிலர்   இந்த ஒரு­மித்த என்­பது தொடர்பில் வித்­தி­யா­ச­மான வியாக்­கி­யா­னங்­களை கூட முற்­ப­டு­கின்­றனர். 

ஆனால்  எனக்குத் தெரிந்­த­வ­கையில் ஒரு­மித்த என்­பது  சிங்­கள மொழியில் ஏக்­கிய என்­ப­தற்­கான  சரி­யான  தமிழ் சொல் என நம்­பு­கின்றேன். ஒரு  என்று வரும்­போது  அங்கு ஒரு நாடு என்ற  பொருள் கிடைக்­கி­றது. எனவே சிங்­க­ளத்தில் ஏக்­கிய  என்­ப­தற்கு  தமிழில்  ஒரு­மித்­த­நாடு என்ற சொற்­பி­ர­யோ­கத்தை ஏற்­றுக்­கொள்­ளலாம்.  

அது­மட்­டு­மன்றி  இலங்­கையின் சட்­டத்தில் ஒரு முக்­கிய விடயம் இருக்­கின்­றது. அதா­வது  ஏதா­வது ஒரு பிரச்­சினை வரும்­போது அல்­லது சிக்­கல்கள் வரும்­போது  சிங்­கள மொழில் இருக்­கின்ற சொற்­பி­ர­யோ­கமே  ஏற்­றுக்­கொள்­ளப்­படும். எனவே  இங்கு ஏக்­கிய என்ற வசனம் சிங்­கள மொழியில் இருப்­பதால் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. 

ஆனால் 1995 ஆம் ஆண்டு மற்றும் 2000ஆம் ஆண்­டு­களில் ஏக்­கிய என்ற வச­னத்தை எடுத்­து­விட்டு ஐக்­கிய என்ற சொற்­ப­தத்தை வைத்து தீர்­வுத்­திட்­டங்­களை முன்­வைத்த பேரா­சி­ரியர் ஜி.எல். பீரிஸ் இன்று  இடைக்­கால அறிக்­கையை எதிர்த்து  பேசிக்­கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­வி­ட­ய­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. இன்று  தமிழ் மக்­களின் பிர­தான கட்­சி­யான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு   முக்­கி­ய­மான ஒரு இடத்­திற்கு இறங்கி  வந்­தி­ருக்­கி­றது. 

அதா­வது சிங்­க­ளத்தில்  ஏக்­கிய என்ற வச­னத்­தையும் தமிழில்  ஒரு­மித்த நாடு என்ற வச­னத்­தையும் ஏற்று  ஒரு தீர்வைப் பெற்­றுக்­கொள்ள தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள்  முன்­வந்­துள்­ளமை   ஒரு­மி­கப்­பெ­ரிய திருப்­பு­மு­ணை­யாகும். தமது அர­சியல் தீர்­வுப்­ப­ய­ணத்தில் கடும் வடுக்­க­ளையும்   இழப்­புக்­க­ளையும் சந்­தித்த வந்த மக்கள் இந்­த­ளவு தூரம் இறங்­கி­வந்­துள்­ளமை  மிகப்­பெ­ரி­ய­தொரு  நிலை­மை­யாகும். இந்த மக்கள் இத­னை­விட கீழே இறங்­கி­வ­ரு­வார்கள் என நாம் எதிர்­பார்ப்­பது  ஆரோக்­கி­ய­மா­காது. 

எனவே ஏக்­கிய மற்றும் ஒரு­மித்த சொற்­ப­தங்­களை ஏற்று இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண  முன்­வந்­துள்ள  தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களின் விட்­டுக்­கொ­டுப்பை பயன்­ப­டுத்தி   இந்­தப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கண்­டு­வி­ட­வேண்டும்.  தமிழ் தலை­வர்கள்  இந்­த­ளவு தூரம்  இறங்­கி­வந்த பின்­னரும்  இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­விடின்  ஒரு­போதும் விடிவு கிடைக்­காது. அது­மட்­டு­மன்றி  இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும் அபாயம் ஏற்­படும். 

குறிப்­பாக ஏக்­கிய மற்றும் ஒரு­மித்த என்ற சொற்­ப­தங்­களை ஏற்று  தீர்­வைக்­காண  முன்­வந்­துள்­ளமை தொடர்பில் தமிழ் மக்­க­ளுக்கு நாங்கள் நன்­றி­கூ­ற­வேண்டும்.  அவர்­க­ளுக்கு நன்­றியை கூறிக்­கொண்டு இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இல்­லா­விடின்  ஒரு­போதும் இந்தப் பிரச்­சி­னையைத் தீர்க்க முடி­யாது. 

தமிழ் மக்கள் இத­னை­விட கீழே இறங்­கி­வ­ரு­வார்கள் என நாங்கள் ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது. ஆனால் இத­னையும் குழப்பி  தடையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு  வடக்கு, மற்றும் தெற்கில் இன­வா­திகள் முயற்­சித்து வரு­கின்­றனர்.  குறிப்­பாக  தெற்கில்   விமல் வீர­வன்ச,  தினேஷ் குண­வர்த்­தன போன்­ற­வர்­களும், வடக்கில்  சிவா­ஜி­லிங்கம், விக்­கி­னேஸ்­வரன் போன்­ற­வர்­களும் அனைத்­தையும் குழப்பி   தீர்வைக் காண­வி­டாமல்   தடையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

இவர்களின்  இந்த  இனவாத செயற்பாட்டை தோற்கடிக்க  நாம் அனைவரும் முன்வரவேண்டும்.  இல்லாவிடின் தற்போதைய இந்த அருமையான சந்தர்ப்பத்திலும்  நீண்டகால  பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாமல்போய்விடும். அதுவும் தமிழ் மக்கள்  பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் கீழே இறங்கி வந்துள்ள நிலையில்  அதனைப் பயன்படுத்தி எம்மால்   தீர்வைக்காண முடியாவிடின்  ஒருபோதும்  இதற்கான சாத்தியம் ஏற்படாது என்பதை  புரிந்துகொள்ளவேண்டும். இந்த இடத்தில் தமிழ் மக்களுக்கு நாங்கள் நன்றிகூற  கடமைப்பட்டிருக்கின்றோம்.