பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்

Published By: Digital Desk 3

19 Jul, 2026 | 05:51 PM
image

(செ.சுபதர்ஷனி)

பிலியந்தலை போக்குந்தர பகுதியில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை வீடொன்றினுள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்கி, தப்பிச்சென்ற 4 சந்தேகநபர்களில் இருவரை பொலிஸார் பிடிக்க முயன்ற போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்குந்தர ஓ.பி. பெரஹேரா மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்திருந்த 4 சந்தேகநபர்கள், வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி வீட்டையும் சேதப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பிலியந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பிலியந்தலை பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் குறித்த நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று தயாராக இருந்தது.

இந்நிலையில் பொலிஸாரைக் கண்ட சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிச்செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை பொலிஸார் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். எனினும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்நிலையில், குறித்த கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற சந்தேகநபரை இலக்குவைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதோடு அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிலையில், அவரையும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட நிலையில், குறித்த ஓட்டுநர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 24 வயதுடைய பண்டாரகம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள், சந்தேகநபர் மற்றும் சந்தேகநபர்களின் தாக்குதலுக்கு ஆளான வீட்டிலிருந்த பெண் ஆகிய மூவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் நேற்றைய தினம் பிலியந்தலை - மஹரகம வீதி வீடொன்றின் தோட்டத்துக்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட...

2026-08-19 19:56:00
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 19:41:40
news-image

இலங்கை - வியட்நாம் இருதரப்பு உறவை...

2026-08-19 19:18:47
news-image

கொழும்பு கோட்டைப் பகுதியை சுற்றுலாத் தலமாக...

2026-08-19 19:06:36
news-image

“டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க...

2026-08-19 18:59:55
news-image

கொரோனா காலத்தில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் :...

2026-08-19 18:35:38
news-image

கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து...

2026-08-19 18:13:39
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-19 18:10:44
news-image

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக...

2026-08-19 17:47:49
news-image

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு;...

2026-08-19 17:44:53
news-image

புத்தள களப்பில் கடற்படையினர் விசேட சோதனை:...

2026-08-19 17:48:48
news-image

செப்டெம்பர் முதல் அனைத்து வாகன தண்டப்...

2026-08-19 17:27:49