அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது: நாமல் ராஜபக்ஷ பகிரங்க குற்றச்சாட்டு!

19 Jul, 2026 | 03:02 PM
image

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு நாட்டில் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை நிலவி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (18) கேகாலை மாவட்டத்தின் தெதிகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய காலகட்டமானது நாட்டில் தற்கொலைகள் அதிமாக இடம்பெறும் ஒரு காலமாக மாறியுள்ளது என நான் கருதுகிறேன். அரசாங்கத்திற்கு எதிராக வாக்குமூலம் அளிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படும் இடங்களுக்குச் சென்று, 'நீங்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டி வரும்' என அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு உள்ளானவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் மக்கள் ஆணையை மீறி, மக்களை நசுக்கி, அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடரலாம் என்று நினைத்தால் அது தவறானது. நாம் கிராம மட்டத்திலிருந்து இதற்கு எதிராக அணிதிரள்வோம்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நீதித்துறை அமைப்பை அரசியல்மயமாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால், காமன்வெல்த் சட்டத்தரணிகள், ஆசிய சட்டத்தரணிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  மற்றும் நீதிபதிகள் சங்கம் ஆகியன நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றன.

மறுபுறம் அரச சேவை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் நாட்டின் நலனுக்காக நேர்மையான முடிவுகளை எடுத்தால், அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே இன்று காணப்படுகிறது. கடந்த கால இயற்கை அனர்த்தங்களின் போது அரச கட்டமைப்பு முடங்கிக் கிடந்ததற்கு அதிகாரிகளின் கைகள் சட்டரீதியாகக் கட்டப்பட்டிருந்தமையே காரணமாகும்.

"இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான முறையில் வரிகளை விதித்த அரசாங்கமாக இந்த அரசாங்கமே காணப்படுகிறது. வெற்றிலை முதல் அத்தனையிலும் வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கம் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டியதாகக் கூறினாலும், மக்களின் வரிப் பணத்தில் கிராமத்து வீதிகளோ, விகாரைகளோ, பாடசாலைகளோ அல்லது வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளோ அபிவிருத்தி செய்யப்படவில்லை.

மாறாக, அரசாங்கத்தின் கணக்கில் இருந்த கோடிக்கணக்கான ரூபா பணத்தை ஹேக்கர்  ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள். தற்போது மத்திய வங்கியும் நிதியமைச்சும் மாற்றி மாற்றிக் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. தவறு யாரிடம் இருந்தாலும், இறுதியில் அதற்கான சுமையை மக்கள் மீதே சுமத்துகிறார்கள்.

விவசாயிகள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் என அனைவரும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் அநியாய வரிவிதிப்பால் நசுக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்படுகிறார்கள். திருடியவர்களைப் பிடிக்காமல், திருட்டைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீதே பொலிஸார் வழக்குத் தொடர்கின்றனர்.

எனவே, அரசாங்கத்தின் இந்த அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் முகங்கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். இனியாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்" என நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உபகுழுவின்...

2026-08-12 14:46:36
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட...

2026-08-13 08:12:11
news-image

நீதிபதிகளின் ஓய்வூதிய வயது மாற்றம் குறித்து...

2026-08-13 06:37:30
news-image

இன்றைய வானிலை 

2026-08-13 06:26:49
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலை சிறைகாவலர் போதைப்பொருளுடன்...

2026-08-13 06:24:16
news-image

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வின்றேல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம்...

2026-08-13 06:22:07
news-image

இலங்கை – எகிப்து இருதரப்பு உறவுகள்...

2026-08-13 06:19:41
news-image

ஊழியர் நிதியங்களை இணைத்து பங்குச் சந்தையில்...

2026-08-13 06:17:15
news-image

22 ஆம் திருத்தத்துக்கு மகாநாயக்க தேரர்கள் ...

2026-08-13 06:14:00
news-image

தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் ஜனாதிபதிக்கும்...

2026-08-13 01:52:15
news-image

இந்தியா – இலங்கை உறவுகள் குறித்து...

2026-08-13 01:49:54
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-08-13 01:47:04