நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும்வியட்ஜெட் விமான சேவைக்கு அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து

19 Jul, 2026 | 05:21 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ள வியட்ஜெட் விமான சேவைக்கு அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் புதிய விமானப் பாதை, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான வியட்ஜெட், கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையிலான தனது முதலாவது நேரடி விமான சேவையை நேற்று (18) சனிக்கிழமை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

இந்த நேரடி விமான சேவையின் ஆரம்பம், இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் , வியட்ஜெட் விமான சேவை இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதை வரவேற்றதுடன், அதன் புதிய சேவைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இலங்கை மற்றும் வியட்நாம் அரச தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் வெற்றிகரமான தொடர்ச்சியாகவே இந்த நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வியட்ஜெட் இன் இந்த புதிய விமானப் பாதை, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இதன் அடிப்படையில், இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாப் பயணங்களை அதிகரிக்கும் நோக்கில், இரு தரப்பினரும் இணைந்து புதிய சுற்றுலாப் பொதிகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக, இரு நாடுகளுக்குமிடையிலான மத மற்றும் கலாசார தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு மதச் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், கலாசார, சுகாதார மற்றும் சாகச சுற்றுலாத் துறைகளின் வளர்ச்சிக்கும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

வியட்ஜெட் விமான சேவை, கொழும்புக்கும் ஹோ சி மின் நகரத்துக்கும் இடையில் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் முன்னெடுக்கவுள்ளது. வியட்ஜெட் இன் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக ஹோ சி மின் நகரம் விளங்குவதால், இலங்கை பயணிகள் வியட்நாமின் ஏனைய நகரங்களுக்கும், கிழக்காசியா, தென்கிழக்காசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலகுவாக பயணிக்க இந்த புதிய சேவை வாய்ப்பளிக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13