(நெவில் அன்தனி)
எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 3ஆவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கலம்போ கெப்ஸ் அணியை எதிர்த்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 5 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ கெப்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் குசல் மெண்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களைக் குவித்தார்.
மத்திய வரிசையில் பென் மெக்டமட் 57 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பந்து வீச்சில் ஆக்கிப் ஜாவேட் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
சாம் ஹாப்பர் 65 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 38 ஓட்டங்களையும் சரித் அசலன்க 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனுஜ சஹான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: சாம் ஹாப்பர்















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM