"நவீன மனித சமுதாயத்தில் ஆன்மீகம் புறக்கணிக்கப்படுகிறது" - பேராயர் கவலை!

Published By: Digital Desk 3

19 Jul, 2026 | 01:00 PM
image

நவீன மனித சமுதாயத்தில் மதமும் ஆன்மீகமும் மிகவும் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்டு, மனித விழுமியங்கள் சீரழிந்து வருவதாகக் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை தெரிவித்துள்ளார்.

மாகேவிட்ட பகுதியில் அமைந்துள்ள 'திவ்ய இரட்சகர்'  தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு ஜூபிலி திருவிழா விசேட மாலை கூட்டுத்திருப்பலியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வளர்ச்சியடைந்த நாடுகளின் தற்போதைய ஆன்மீக வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி கர்தினால் மேலும் உரையாற்றுகையில், 

பல வளர்ந்த நாடுகளில், மக்கள் வார இறுதி நாட்களில் தேவாலயங்களுக்குச் செல்வதை விடுத்து, தங்களது பொழுதுபோக்கு மற்றும் உல்லாசப் பயணங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.

ஐரோப்பா முழுவதும் உள்ள பிரம்மாண்டமான பேராலயங்கள் இன்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிப் போயுள்ளன. ஆனால், அங்குள்ள கால்பந்து மைதானங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலெனத் திரள்கின்றனர். இது மனிதர்களின் முன்னுரிமைகள் மாறியுள்ளதைக் காட்டுகிறது.

பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பில் வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் பல சமூகங்கள், தார்மீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பாரிய வீழ்ச்சியைக் கண்டு வருகின்றன.

மனிதர்கள் தங்களின் உன்னதமான மனித விழுமியங்களையும் பண்புகளையும் மறந்துவிட்டு, தங்களது பௌதிக மற்றும் சரீரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இத்தகைய நவீன சமூக அமைப்பில், மனிதனின் ஆன்மீக வாழ்க்கையானது மிகவும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டு, மிகக் குறைந்த இடத்தையே பிடித்துள்ளதாகப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தனது பிரசங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42
news-image

சில அரச நிறுவன ஊழியர்களுக்கு சம்பள...

2026-08-19 17:10:58
news-image

சிரானி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக நியமித்ததும்,...

2026-08-19 16:32:02
news-image

கடும் வெப்பம் : நீண்ட நேரம்...

2026-08-19 17:11:35
news-image

வடகிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் நோக்கில் மகாவலி...

2026-08-19 17:12:34
news-image

மட்டக்களப்பில் 216 கி.மீ. மின்வேலி அமைப்பு:...

2026-08-19 17:24:19