கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திக்கு அருகில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட சுற்றுலா ஹோட்டல் ஒன்றைக் கட்டுவதாகக் கூறிவிட்டு, சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கு எதிராகப் பிரதேச மக்கள் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
கடந்த 2020.12.10 அன்று மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த இடத்தில் நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2025.12.25 அன்று நகர அபிவிருத்தி அதிகார சபையினாலும் இதற்கான அபிவிருத்தி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
06 ஏக்கர் 01 ரூட் பரப்பளவைக் கொண்ட இந்த நிலத்தில், ஆரம்பத்தில் 3,857 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒற்றை மாடி கட்டிடத்திற்கே அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் தந்திரமாக மாற்றி, 12,925 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட 5 மாடி சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலை கட்டிடத்திற்கான அனுமதிப்பத்திரமாக இது மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தக் கட்டுமானப் பகுதி கொழும்பு - கட்டுநாயக்க பிரதான வீதியிலிருந்து நீர்கொழும்பு கலப்பு வரை நீண்டுள்ளது. இதனால் பின்வரும் தரப்பினரும் கட்டமைப்புகளும் நேரடியாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது:
கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க விமான நிலையம்.
இப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் வளாகங்கள் மற்றும் 3 முன்னணி சர்வதேச பாடசாலைகள்.
நீர்கொழும்பு கலப்பு மற்றும் அதனை நம்பி வாழும் மீனவ சமூகம்.
விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள லியனகெமுல்ல கண்டல் தாவரக் காடுகள்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பெண் ஊழியர்களின் விடுதிகள் மற்றும் முத்துராஜவெல சுற்றுலா படகுத் தொழிலாளர்கள்.
இலங்கையின் மிக முக்கிய சுற்றுலா மற்றும் குடியிருப்பு வலயமான இப்பகுதியில், சிமெந்து தூசிகளால் சூழல் மாசடைவது பாரிய ஆரோக்கிய மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் எனப் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடு பாதைக்கு மிக அருகில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால், இதிலிருந்து வெளியேறும் சிமெந்து துகள்கள், விமானங்களின் எஞ்சின்களுக்குள் நுழைந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என விமான நிலைய விமானப் பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்றையதினம் காலை நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், பிரதேச மீனவர்கள், சுற்றாடல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் உறுப்பினர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் பெற்றோர்கள் எனப் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM