ஹொரணை – மொரகஹஹேன வீதியில், கனன்வில விகாரை வளைவுக்கு அருகில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் இவர்கள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிள், கனன்வில விகாரை வளைவுக்கு அருகில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் எதிர் திசைப் பகுதிக்கு பாய்ந்துள்ளது.
அதே நேரத்தில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னால் பயணித்தவரும் உடனடியாக ஹொரணை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பன்னிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவரும், கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தினைத் தொடர்ந்து டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் இன்றைய தினம் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM