கொட்டகலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்றது.
கொட்டகலை பிரதேச சபை தலைவர் இராஜமணி பிரசாந்த் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போது கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்று மலையக சமூகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக அர்ப்பணிப்புடன் பங்காற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்களும் கௌரவிக்கப்பட்டனர். இதன் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் பா.தங்கம் இந் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்விற்கு கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதன், உறுப்பினர் நந்தகோபால் பாஸ்கரன் , உறுப்பினர் கணபதி கண்ணதாசன், உறுப்பினர் பொன்னையா இரவிச்சந்திரன், உறுப்பினர் கணேசன் இராஜேந்திரன், உறுப்பினர் கோவிந்தராஜ் நேசமலர், உறுப்பினர் இராமதாஸ் சாந்தினி, உறுப்பினர் ரசிக்கா ஜீவனி கலந்துகொண்டனர்.
மேலும், ஹட்டன் சீடா கல்வி வள நிலையத்தின் இணைப்பாளர் பரமஜோதி, கொட்டகலை வேல்ட் விஷன் நிறுவனத்தின் அபிவிருத்தி அதிகாரி ஜோஷ்வா , கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் விஜேசுந்தரம் , கொட்டகலை பொது நூலகத்தின் நூலக பொறுப்பதிகாரி சமரக்கோன் உட்பட கொட்டகலை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM