(லியோ நிரோஷ தர்ஷன்)
வங்காள விரிகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பானது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை, தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக மட்டுமே இந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொன்தா தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற 5வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்திலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
6வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தை இலங்கை 2027 ஆம் ஆண்டில் நடத்தவுள்ள நிலையில், பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கைக்கு இருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு குறித்து அங்கு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் குறிப்பிடுகையில்,
வங்காள விரிகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பானது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கை, தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலமாக மட்டுமே இந்த பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். தற்போது பிராந்தியம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில், பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதம், சைபர் அச்சுறுத்தல்கள், எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் , போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல், தவறான தகவல் பரப்புதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் என பல சவால்கள் உள்ளன. இந்த சவால்கள் அனைத்தும் தேசிய எல்லைகளைத் தாண்டி பரவக்கூடியவை என்பதால், இவற்றுக்கு கூட்டுப் பதிலடி கொடுப்பது அவசியமாகும். எந்தவொரு தனி நாடும் இத்தகைய சவால்களைத் தனிமைப்படுத்தப்பட்டு, தனித்து நின்று திறம்பட எதிர்கொள்ள முடியாது.
தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையே ஒரு பாலமாக பிம்ஸ்டெக் அமைப்பு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக இந்த பிராந்திய கூட்டமைப்பு விளங்குகிறது. வெறும் கலந்துரையாடல்களுடன் நின்றுவிடாமல், அவற்றை உறுதியான செயல்பாடுகளாக மாற்ற வேண்டியது அவசியமாகும். இதற்காக உளவுத்துறை மற்றும் தகவல் பகிர்வு வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துதல் முக்கியமாகிறது. எல்லைகடந்த குற்றங்கள் மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்தப்பட வேண்டும். மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் காலப் பதிலடித் திட்டங்களைச் சீரமைத்தல் மற்றும் பிராந்திய நிறுவனங்களுக்கு இடையே அதிகளவிலான கூட்டாண்மையை ஏற்படுத்துதல் என்பன முக்கியத்துவமிக்கதாக உள்ளது.
நிலையான பாதுகாப்பு என்பது எல்லைகளை வலுப்படுத்துவதில் மட்டும் தங்கியிருக்கவில்லை. மாறாக நம்பிக்கை, கூட்டுப் பொறுப்பு மற்றும் பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் வலுவான கூட்டாண்மைகளிலேயே தங்கியுள்ளது. புவியியல் ரீதியான நெருக்கத்தை, ஒரு மூலோபாய ஒற்றுமையாக மாற்றுவதில் தான் பிம்ஸ்டெக் அமைப்பின் உண்மையான வலிமை அடங்கியுள்ளது. இதன் மூலம் உறுப்பு நாடுகள் கூட்டாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்காக அமைதியான, மீளெழுச்சிமிக்க மற்றும் வளமான வங்காள விரிகுடா பிராந்தியத்தை உருவாக்க முடியும் என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM