(லியோ நிரோஷ தர்ஷன்)
தலைமை நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக, பாரிய அரசியல் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கமைய, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத அனைத்து எதிர்க்கட்சிகளினதும் அவசரக் கூட்டமொன்றை எதிர்வரும் வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடத்துவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானமானது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாடளாவிய ரீதியில் சிவில் மற்றும் அரசியல் ரீதியான பாரிய அழுத்தங்களை உருவாக்குவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இக்கூட்டத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுக்கும் நோக்கில், கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் தனித்தனியாகத் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராகக் கூட்டுப் போராட்டமொன்றை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அழைப்பிற்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட மற்றும் அதற்கு வெளியேயுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுக்காலத்தை நீடிப்பதற்கான அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே நாட்டின் சட்டத்துறையினர் மற்றும் சர்வதேச அமைப்புகள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இலங்கை நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய உள்நாட்டு அமைப்புகளுடன் இணைந்து, ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்குத் தமது பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. நீதித்துறையின் உயர் பதவிகளில் இவ்வாறான தன்னிச்சையான வயதெல்லை மாற்றங்களை மேற்கொள்வது, நீதித்துறை மீதான அரசியல் செல்வாக்கை அதிகரிக்கும் என இத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்து வரும் பின்னணியில், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM