அநுராதபுரம் நகரிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபையின் சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் காணப்பட்ட காலவதியான பல மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் வடமத்தி
அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் விமல சூரிய அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக நகரிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் நுகர்வோர் அதிகாரசபையின் அநுராதபுரம் பிராந்திய அலுவலக சுற்றிவளைப்பு அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது ஆறு வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் காணப்பட்ட காலவதியான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் மருந்துவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதனை அடுத்து நுகர்வோர் அதிகாரசபையின் கட்டளைச் சட்டங்களுக்கு அமைவாக அநுராதபுர நீதிமன்றத்தில் ஆறு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் போது தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஆறு வைத்தியசாலை களுக்கும் ஆறு இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அநுராதபுரம் இலக்கம் இரண்டு நீதிமன்ற நீதிவான் அவர்களினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM