(நெவில் அன்தனி)
மியாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை கொல் மழை பொழியப்பட்ட பீபா உலகக் கிண்ண வெண்கலப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் பிரான்ஸை 6 - 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிகொண்டது.

இந்த பரபரப்பான போட்டியில் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் இங்கிலாந்தும் இரண்டாவது பகுதியில் பிரான்ஸும் ஆதிக்கம் செலுத்தின.
இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்ட போது இங்கிலாந்து 4 - 0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பகுதியில் பதிலடி கொடுத்த பிரான்ஸ் 4 கோல்களைப் போட்டது.
ஆனால், இங்கிலாந்து மேலும் 2 கோல்களைப் போட்டு வெற்றியீட்டி 3ஆம் இடத்தை உறுதி செய்துகொண்டது.

இந்தப் போட்டியில் வழமையான இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தலைவராக விளையாடிய டெக்லான் ரைஸ் முதலாவது கோலை போட்டு அசத்தினார்.
போட்டி ஆரம்பித்து 3 நிமிடங்களே ஆன நிலையில் டெக்லான் ரைஸ், பெனல்டி எல்லைக்கு வெளியிலிருந்து மிக நேர்த்தியாக பந்தை கொலின் வலப்புறத்துக்குள் புகுத்தினார்.
18ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கோர்ணர் கிக்கை டெக்லான் ரைஸ் உயர்வாக உதைக்க அதனை நோக்கித் தாவிய எஸ்ரி கோன்ஸா தனது தலையால் முட்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலை போட்டார்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து தனது 3ஆவது கோலை 37ஆவது நிமிடத்தில் போட்டது.
இடதுபுறமாக பந்தை நகர்த்திச் சென்ற மார்க்கஸ் ரஷ்போர்ட் உட்பறமாக பந்தை பரிமாறியபோது புக்காயா சாக்கா அதனை கோலக்கினார்.
இடைவேளைக்கு முன்னர் வழங்கப்பட்ட உபாதையீடு நேரத்தில் (45+1 நி.) ஏப்ரெச்சி ஈஸ் மத்திய முன் களத்தில் இருந்து பரிமாறிய பந்தை நோக்கி ஓடிய புக்காயா சாக்கா தனது இரண்டாவது கோலை போட்டார்.
இடைவேளை - இங்கிலாந்து 4 - பிரான்ஸ் 0
இடைவேளைக்குப் பின்னர் வீறுகொண்டெழுந்த பிரான்ஸ் 18 நிமிட இடைவெளியில் 3 கோல்களைப் போட்டு கோல் நிலையை 3- 4 என ஆக்கி இங்கிலாந்துக்கு சவால் விடுத்தது.
48ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் பரிமாறிய பந்தை பிரான்ஸ் அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே கோலாக்கினார்.
ஆறு நிமிடங்கள் கழித்து எம்பாப்பேயிடம் இருந்த பந்தை பெற்றுக்கொண்ட ப்றட்லி பார்க்கோலா அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.
கிலியான் எம்பாப்பே 66ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் போட்டு 2026 உலகக் கிண்ணத்தில் தனது ஒட்டுமொத்த கொல் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்திக்கொண்டார்.

போட்டியின் 85ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்பென்ஸை தனது பெனல்டி எல்லைக்குள் பிரான்ஸ் வீரர் கஸ்டோ முரணான வகையில் வீழ்த்தியதால் இங்கிலாந்துக்கு பெனல்டி வழங்கப்பட்டது.
அந்த பெனல்டியை சாக்கா கோலாக்கி தனது கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்திக்கொண்டார்.
உபாதையீடு நேரத்தில் ஊஸ்மான் டெம்பெல் (90+6 நி.) பிரான்ஸ் சார்பாகவும் ஜூட் பெலிங்ஹாம் (90+8 நி.) இங்கிலாந்து சார்பாகவும் கோல்களைப் போட்டனர்.
கிலியான் எம்பாப்பே 22 கோல்கள்
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக கோல்களைப் போட்டவர் என்ற சாதனையை பிரான்ஸ் அணித் தலைவர் கிலியான் எம்பாப்பே நிலைநாட்டியுள்ளார்.

2018, 2022, 2026 ஆகிய மூன்று உலகக் கிண்ண அத்தியாயங்களில் கிலியான் எம்பாப்பே 22 போட்டிகளில் 22 கோல்களைப் புகுத்தியுள்ளார்.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் வரிசையில் மெஸ்ஸியை விட ஒரு கோல் அதிகமாக போட்டு முதலிடத்தில் இருக்கிறார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM