(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற சகோதர கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் ரட்ணம் கழகத்தை 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் றினோன் வெற்றிகொண்டது.
சுமார் 5 வருடங்களின் பின்னர் இந்த இரண்டு கழகங்களும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் மோதிக்கொண்ட இப் போட்டியை கண்டுகளிக்க கொட்டாஞ்சேனை, மற்றும் கொச்சிக்கடை கால்பந்தாட்ட இரசிகர்கள் பெருமளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் பிரதான கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெறுவதாலும் இன்னும் கால்பந்தாட்டம் சூடுபிடிக்கத் தொடங்காததாலும் போட்டிகளைக் கண்டுகளிக்க குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களே வருகை தருகின்றனர்.
மேலும் டிக்கெட் கட்டணங்களின் விலை அதிகம் என்பதால் தங்களுக்கு கட்டுப்படியாகாது என இரசிகர்களில் பெரும்பாலானவர்கள் கூறினர்.
இது இவ்வாறிருக்க, ரட்னம் கழகத்துக்கும் றினோன் கழகத்துக்கும் இடையிலான போட்டி எதிர்பார்த்த அளவு சுவாரஸ்யத்தையோ விறுவிறுப்பையோ ஏற்படுத்தவில்லை.

எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய றினோன் கழகம் போட்டியின் முதலாவது பகுதியில் குறைந்தது 5 இலகுவான கோல் போடும் வாய்ப்புகளைத் தவறவிட்டது.
அவற்றில் இரண்டு வாய்ப்புகள் எதிரணியின் கோல் வாயிலில் வைத்து தவறவிட்டப்பட்டன.
இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்டபோது இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் றினோன் கழகம் கோல் போடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.
அதேவேளை, ரட்ணம் கழகத்துக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளை முன்களவீரர்கள் தவறவிட்டனர்.
போட்டியின் 54ஆவது நிமிடத்தில் எகிப்து நாட்டு வீரரான ஆப்டெல்பட்டா அஹ்மத் இடதுபுறத்தில் இருந்து சாதுரியமாக பரிமாறிய பந்தை நோக்கி ஓடிய அமான் பைஸர் மிகவும் அலாதியாக கோலினுள் புகுத்தி றினோன் கழகத்தை முன்னிலையில் இட்டார்.
இந்த கோலினால் உற்சாகம் அடைந்த றினோன் மேலும் 2 நிமிடங்கள் கழித்து இரண்டாவது கோலை போட்டது.

55ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக களம் புகுந்த சித்துக்க ஹன்னதிகே செய்த குறுகிய பந்து பரிமாற்றத்தைப் பயன்படுத்தி பறீக் அஹமத் சுமார் 35 யார் தூரத்தில் இருந்து மிகவும் இலாவகமாக பந்தை கோலினுள் புகுத்தினார்.
பறீக் அஹமத், அணி பயிற்றுநர் பஸ்ருள் றஹுமானின் மகன் ஆவார்.
உபாதையீடு நேரத்தின்போது (90+2 நி.) ஆப்டெல்பட்டா அஹ்மத் வலது புறத்தில் இருந்து தாழ்வாக பரிமாறிய பந்தை ரட்னம் கோல்காப்பாளர் நஸ்ரின் யமான் தடுத்தபோது எகிறிவந்த பந்தை நோக்கி வேகமாக நகர்ந்த மற்றொரு மாற்று வீரர் மொஹம்மத் ஷஹில் கோல் ஆக்கினார்.
சற்று நேரத்தில் ஆட்டம் முடிவடைய றினோன் 3 - 0 என வெற்றிபெற்றது.

போட்டி முடிவில் கருத்து வெளியிட்ட அணிகளின் அதிகாரிகள், ஐந்து வருடங்களின் பின்னர் சுப்பர் லீக் கால்பந்தாட்டம் உயிர்பெற்றுள்ளது. வீரர்களும் ஐந்து வருடங்களின் பின்னரே விளையாட ஆரம்பித்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து உடனடியாக திறமையை எதிர்பார்க்க முடியாது. குறைந்தது இன்னும் மூன்று, நான்கு போட்டிகளில் விளையாடும்போதுதான் அவர்களது உண்மையான திறமையைக் காணக்கூடியதாக இருக்கும் என்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM