ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்; கண்டி றோயல்ஸை 18 ஓட்டங்களால் வென்றது தம்புள்ள  சிக்ஸர்ஸ்

18 Jul, 2026 | 09:25 PM
image

(நெவில் அன்தனி)

கண்டி றோயல்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் போட்டியில் தம்புள்ள  சிக்ஸர்ஸ்   அணி 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியீட்டியது.

ரிஸா ஹெண்ட்றிக்ஸின் அபார துடுப்பாட்டம், குல்பாதின் நய்பின் சகலதுறை ஆட்டம் என்பன தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்து 94 ஓட்டங்களும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 50 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 87 ஓட்டங்களுடனும் குல்பாதின் நய்ப் 23 பந்துகளில் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களை விட சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் மார்க்ஸ் அக்கர்மன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டேல் பிலிப்ஸ் 52 ஓட்டங்களையும் லஹிரு உதார 44 ஓட்டங்களையும் விஜய் ஷங்கர் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்தவீச்சில் குல்பாதின் நய்ப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் வசிம் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப்

இப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கார்பீல்ட் சோர்பஸின் மறைவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46