சி.டி. விக்ரமரத்ன மரண விசாரணை தீவிரம்: பொலிஸார் எடுத்துள்ள அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை!

18 Jul, 2026 | 06:20 PM
image

(நமது நிருபர்)

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை  திங்கட்கிழமை  (20) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அவரது பூதவுடலை கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக, மாலபே, தலாஹேனவிலுள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தியும் பொலிஸ் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மாலபே, தலாஹேனவிலுள்ள தமது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் பதிவாகியிருந்தது. 

தனது மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸ் விசாரணை பிரிவு சந்தேகிக்கிறது.

இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது, மகனின் நீதிமன்ற விவகாரம் ஒன்று காரணமாக தனது கணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும்  இணைந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50