ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார் அமைச்சர் சுசில் ரணசிங்க

18 Jul, 2026 | 06:08 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்டுவான் பகுதியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை  நடைபெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்   வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அவர்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபா 50 இலட்சம் பெறுமதியான புதிய வீடுகள் அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன், முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16
news-image

இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸார் இருவருக்கு...

2026-08-19 14:31:01
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2026-08-19 14:29:13
news-image

யானை – மனித மோதலில் மட்டக்களப்பு...

2026-08-19 14:18:14
news-image

இந்திய "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன்...

2026-08-19 14:21:24
news-image

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.3,900...

2026-08-19 14:12:41
news-image

வத்தேகம சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல்கள்...

2026-08-19 14:14:32
news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09