பொலிவுட் இயக்குநர் சேட்டன் டி கே இயக்கத்தில் தயாரிப்பாளர் சாகர் பி ஷிண்டே எழுதி தயாரித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து மேற்கொள்ளப்படும் விவசாயத்தாலும்... அதில் விளைவிக்கப்படும் விளைப் பொருட்களாலும்... மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து.. சட்ட போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் .. சரணடைய மறுக்கும் அவளின் உறுதித் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் 'நீ செல்' என்றொரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணியாக காஜல் அகர்வால் நடித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தில் இடம் பிடித்த 'நீ செல்..' எனத் தொடங்கும் பாடலை பாடலாசிரியர் ஷகில் அசாமி எழுத, பின்னணி பாடகி ரிச்சா சர்மா பாடி இருக்கிறார்.
எம் ஐ ஜி புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் ஸ்ரேயாஸ் தல்படே, முரளி சர்மா உள்ளிட்ட பலர் தயாரித்திருக்கிறார்கள். மங்கேஷ் தாக்டே இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை டி சீரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல் வரிகள் - ஒரு பெண்ணின் உளவியல் வலிமையை பலவீனப்படுத்தும் பல காரணிகள் ஆக்கிரமித்தாலும், சரணடைய மறுத்து அதற்கு எதிராக மனவெழுச்சியுடன் பயணப்படும் ஒரு பெண்ணின் பயணத்தை இந்த பாடல் விவரிப்பதால்... ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM