லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

18 Jul, 2026 | 05:35 PM
image

டிஜிட்டல் திரை பிரபலமான நடிகர் பாரத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் வெளியீட்டு திகதி குறித்த பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், 'ஆதித்யா' கதிர், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் - தி ரூட் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் - ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்... இத்திரைப்படம் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழு வெளியிட்ட காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47