நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

18 Jul, 2026 | 05:32 PM
image

அறிமுக நடிகர் டி. அண்டனி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தேடல் தொடருதே..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் டி. அண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏன் என்னை ஏதோ செய்தாய்' திரைப்படத்தில் டி. அண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பியட்ரோ வில்லனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜெய்கர் ஹரி நாத் - அசோக் ஸ்ரீதரன்- ஜாய் ரீடா- ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.  ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அண்டனி'ஸ் அட்லியே நிறுவனம் சார்பில் டி. அண்டனி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பிடித்த 'விரல் தொட அணைப்பாயோ எனை... இதழ் பட வரைவாயோ நுதல் சிலிர்த்திட ...' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாடலாசிரியர் தமிழ் மணி எழுத பின்னணி பாடகர் ஜெய்கர் ஹரிநாத் மற்றும் பின்னணி பாடகி சஞ்சனா கல்மாஞ்சே ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் மெட்டு- தாளலயம்- பாடல் வரிகள்- காட்சிகள்- நடன அமைப்பு -என அனைத்து அம்சங்களும் இளமை ததும்ப இருப்பதால்... ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47