அதர்வா முரளி - கயாடு லோகர் - பிரீத்தி முகுந்தன் ஆகியோரின் நேர்த்தியான பங்களிப்பில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் கடந்த பத்தாம் திகதி உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு இப்படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான பிரத்யேக நிகழ்வு சென்னையின் பாரம்பரியமான அடையாளமாக திகழும் விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
நாயகன் அதர்வா முரளி பேசுகையில், '' இப்படத்தின் கதையை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சொன்னவுடன் எமக்கும், எம்முடைய குடும்ப உறுப்பினர்களும் மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் வரை நீடித்தது. இருப்பினும் திட்டமிட்டு நேர்த்தியாக இப்படத்தை இயக்குநர் உருவாக்கினார். நீண்ட நாள் கழித்து தமிழ் சினிமாவில் மென்மையான காதலை சொல்லும் படைப்பாக 'இதயம் முரளி' வெளியாகி உள்ளது.
இப்படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் பரஹம்சா- சி ஹெச் சாய், இசையமைப்பாளர் தமன், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ் ஆகியோரின் பங்களிப்பு அதிகம் . படத்தொகுப்பிற்கு முன் இந்த திரைப்படம் நான்கு மணி நேர படமாக இருந்தது. ஆனால் இரண்டே முக்கால் மணி நேரமாக பின்னர் எடிட் செய்யப்பட்டது. இசையமைப்பாளர் தமன் முதலில் ஐந்து பாடல்கள் என்றார். ஆனால் எட்டு பாடல்கள் இடம் பிடித்தது. தமிழ் & தெலுங்கு திரையுலகில் பளபளப்பான இசையமைப்பாளராக பணியாற்றினாலும்.. கிடைத்த கொஞ்ச ஓய்வு நேரத்தில் எங்களுடன் இணைந்து நடித்த தமனுக்கு நன்றி. மேலும் இப்படத்தில் நடித்த நடிகைகள் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. அதிலும் குறிப்பாக சின்னி ஜெயந்த். இந்தப் படத்திலும் நடித்து, ரசிகர்களுக்கு அப்பாவின் ஃபேவரைட்டான 'இதயம்' படத்தை நினைவு படுத்தியததற்காக அவருக்கும் நன்றி.
இந்த விழா பாடசாலையில் கல்வி பயின்று நிறைவு செய்த பிறகு ஒன்றாக இணையும் ரியூனியன் திருவிழா போல் இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி'' என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM