டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்கான முன்னணி பொழுதுபோக்கு தளம் ஜீ 5 - குழந்தை ரசிகர்களை குறி வைத்து குடும்பங்கள் கொண்டாடும் வகையில் கிட்ஸ்- KidZ எனும் பிரத்யேக பார்வையாளர்களுக்கான அனிமேஷன் தொடர்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வகையில் ஜூலை 17ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் 'சிவலோக் கி குண்டக்கா மண்டக்கா' எனும் அசல் அனிமேஷன் தொடர் வெளியாகி பாரிய வரவேற்பை பெற்று வருகிறது.
எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுத்தில் வெளியான த வெரி எக்ஸ்ட்ரீம்லி மோஸ்ட் நாட்டி அசுரா டேல்ஸ் ஃபார் கிட்ஸ் - The very, Extremely,Most Naughty Asura Tales for Kids எனும் நூலை தழுவி, இந்த 'சிவலோக் கி குண்டக்கா மண்டக்கா' எனும் அனிமேஷன் இணைய தொடர் உருவாகி இருக்கிறது. இதனை அருஷி கோவில்- தல்பீர் சிங் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். இந்த தொடர் தற்போது ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த அனிமேஷன் தொடரில் குறும்புத்தனம் மிக்க இரட்டை அசுரர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா ஆகியோர்களின் விளையாட்டுத் தனமான நிகழ்வுகளுடன் அவர்களின் துணிச்சல்- நட்பு- சாகசம்- ஆகியவையும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச புராணக் கதைகளை கடந்து.. புராண உலகத்தை புதிய கோணத்தில் விவரிக்கும் இந்த தொடரில், இளம் தலைமுறையினரின் முடிவுகள் பற்றிய விடயங்கள் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இது மொழிகளைக் கடந்து குழந்தைகளையும் அவரது பெற்றோர்களையும் மகிழ்விக்கும் வகையில் உருவாகி இருப்பதால்.. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM