இன்றைய சூழலில் எம்முடைய தகவல் தொடர்பு அனைத்தும் நாம் பேசுவதன் மூலமாகவே வெளிப்படுத்துகிறோம். பேசுவதற்கு எம்முடைய குரல் அவசியமானது. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய குரல் தனித்துவமானது. இத்தகைய குரலில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அதனை துல்லியமாக அவதானிக்க தற்போது ஸ்ட்ரோபோஸ்கோபி எனும் நவீன பரிசோதனை கருவி அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொருவரும் தங்களது குரல் மூலமாகவே தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் குரல்- பாடகர்களுக்கும்... பேச்சாளர்களுக்கும்... சமூக ஊடக வலைதள பிரபலங்களுக்கும்... வாழ்வாதாரமாகவும் திகழ்கிறது. இந்நிலையில் எம்முடைய குரலில் பல்வேறு காரணிகளால் மாற்றங்களோ... அல்லது பாதிப்புகளோ ஏற்பட்டால், அதனால் விவரிக்க இயலாத அசௌகரியங்களை எதிர்கொள்கிறோம்.
பொதுவாக எம்முடைய குரல் நாண் ( Vocal Cards ) ஒரு வினாடிக்கு 130 முதல் 350 முறைக்கு மேல் அதிர்வுகளை ஏற்படுத்தி, ஒலிகளை உண்டாக்குகிறது. இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால்... தற்போது உள்ள பரிசோதனை கருவி மூலம் துல்லியமாக சில பாதிப்புகளை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தற்போது ஸ்ட்ரோபோஸ்கோபி எனும் நவீன பரிசோதனை கருவி கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த கருவியின் மூலம் எம்முடைய குரல் நாண்- குரல் வளை- ஆகிய பகுதிகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் இருந்தாலும் அதனை துல்லியமாக அவதானிக்க இயலும். அத்துடன் அதற்குரிய பிரத்யேக சிகிச்சைகளையும் வழங்க இயலும். தற்போது இந்தக் கருவி முப்பரிமாண தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால்... பாதிப்பினை துல்லியமாக கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்
வைத்தியர் மஞ்சுநாத் தொகுப்பு அனுஷா.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM