இன்றைய சூழலில் எம்மில் பலரும் வாழ்க்கையில் சிறிதளவாவது சொந்தமாக காணியை வாங்கி, அதில் வீடு கட்டி வாழ்ந்திட வேண்டும் என்பதுதான் லட்சியமாகவே இருக்கும்.
ஆனால் பலருக்கு கையில் பணம் இருந்தாலும்... வங்கியில் கடன் உதவி கிடைத்தாலும்... வெளிநாட்டில் வாழும் நண்பர்களின் நிதி உதவி மற்றும் நன்கொடை கிடைத்தாலும்... வாஸ்து தோஷம் இல்லாத காணி கிடைப்பது அரிது.
இந்நிலையில் வாஸ்து தோஷம் இல்லாத காணி கிடைத்து, அதில் வீடு கட்டி, பரம்பரை பரம்பரையாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட வேண்டும் என்றால்... அதற்கும் ஒரு எளிய வழிமுறை உண்டு என்று எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : சிவப்பு வண்ணத்திலான பட்டு அல்லது பருத்தியாலான வஸ்திரம், துவரம் பருப்பு அதிகமாக பாவிக்கப்பட்ட பருப்பு சாதம் அல்லது உணவுப் பொருள்.
செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள முருக பெருமானின் ஆலயத்திற்கு சென்று, அந்த ஆலயத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் வீரபத்திரருக்கு சிவப்பு வண்ணத்திலான பட்டு அல்லது பருத்தியாலான வஸ்திரத்தை சாற்றி, துவரம் பருப்பு அதிகமாக உள்ள பருப்பு சாதம் அல்லது உணவு பொருளை நிவேதனமாக படைத்து, வீரபத்திரரிடம் 'வாஸ்து தோஷம் இல்லாத காணி அமைந்திட வேண்டும்.
அதற்கு உங்களின் அருள் பரிபூரணமாக கிடைத்திட வேண்டும்' என பிரார்த்தனை செய்து, நிவேதனத்தை அங்குள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிட வேண்டும். இதனை தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொண்டு வந்தால்... அதனைத் தொடர்ந்து வரும் 48 நாட்களுக்குள் உங்களுக்கு வாஸ்து தோஷம் இல்லாத.. விரும்பிய வகையில் காலியான காணி கிடைப்பதற்கான சூழல் உருவாகும். அதன் பிறகு அங்கு வீடு கட்டி, உற்சாகமாக வாழத் தொடங்கலாம்.
தொகுப்பு: சுபயோக தாசன்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM