அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு என அஜித் பி. பெரேரா உறுதி!

18 Jul, 2026 | 03:53 PM
image

( இராஜதுரை ஹஷான்)

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்க்கட்சிகளின் சகல உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள்  என ஐக்கிய மக்கள் சக்தியின்  களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நீதி அமைச்சர் தனக்குரிய அனைத்துப் பொறுப்புகளையும் தட்டிக்கழித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்றத் தவறியதன் காரணமாக, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தீர்மானித்தோம்.

இதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் கையெழுத்திட்டனர். 

இந்த பிரேரணை எதிர்வரும் வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்.நீதியமைச்சர் மீதான குற்றச்சாட்டை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.ஆகவே நம்பிக்கையில்லா பிரேரணையை  சபாநாயகர் ஏற்க வேண்டும். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50